போலந்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.... தாக்குதல் நடத்தியவர் உயிரிழப்பு!

 
போலந்து

 

போலந்தின் கிராகோவ் நகரில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 24 வயது நபர், போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கடந்த நவம்பர் 7-ம் தேதி கிராகோவ் நகரின் பழைய நகரப் பகுதியில் உள்ள முக்கியச் சந்தைச் சதுக்கத்தில் ராணுவ உடை போன்ற ஆடையும், குண்டு துளைக்காத கவச உடையும் அணிந்திருந்த அந்த நபர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் வெளிநாட்டினரும், இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

 

தாக்குதலைத் தடுக்க முயன்ற போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நவம்பர் 9-ம் தேதி உயிரிழந்தார்.

இதற்கிடையே, அவருடைய குடும்ப வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகிய மூவரின் உடல்களும் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. இந்த மூவரையும் அவரே கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 Kraków shooting suspect who killed six has died, say police in Poland | Poland | The Guardian

அந்த நபருக்கு வலதுசாரி தீவிரக் கொள்கைகள் மீது ஈர்ப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் பயங்கரவாதச் செயலாக இருக்குமா, அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது