பிரபல நடிகைக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த இளைஞர்.... தட்டித் தூக்கிய காவல்துறை!

 
marathi

பிரபல வங்காள நடிகை மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ் சக்கரவர்த்தியின் மனைவி சுப கங்குலி, லியோனல் மெஸ்ஸியை சந்தித்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதனால் சில ரசிகர்கள், ‘விஐபி சலுகை’ குறித்து கோபம் காட்டி, நடிகை மற்றும் அவரது குழந்தைகளைப் பற்றிய அவதூறு மற்றும் கொலை மிரட்டல்கள் பதிவிட்டனர்.

நடிகையின் கணவர் கடந்த 14ம் தேதி திட்டாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றிய அரசியல் நோக்கமுள்ள தவறான கருத்துகள் பரவுவதாகவும், அவற்றைத் தடுக்க காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் பீகாரைச் சேர்ந்த பிட்டு வஸ்தவா என்ற வாலிபர் இந்த பதிவுகளை வெளியிட்டார் என கண்டறிந்தனர். பின்னர், கொல்கத்தா தனிப்படை போலீசார் அவரை கைது செய்து பாராக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.