பெரும் பரபரப்பு.. போதை இளைஞர் மரணம்.. காவல்துறை மீது கல்வீச்சு.. எஸ்.ஐ மண்டையை உடைத்த உறவினர்கள்..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மகன் அன்புராஜ் (20). இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், பாலமுருகன் ஆகியோர் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் பெண்ணாடத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அதே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, பெண்ணாடம் காவல் நிலையம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அன்புராஜின் பைக்கை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்தனர். பின்னர் வாகனத்தை சிறைபிடித்த போலீசார் பாலமுருகனின் தாய் சாந்தி, தந்தை தியாகராஜன் ஆகியோரை காலையில் வந்து எடுத்து செல்லுமாறு கூறி அன்புராஜ், முத்துராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் பொன்னேரி பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு 2 மணியளவில் தலையில் காயத்துடன் அன்புராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்புராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திக்கக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று மதியம் அன்புராஜின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், நள்ளிரவில் வாகன தணிக்கை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், பேடக்குடி டிஎஸ்பி மோகன் ஆகியோர் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், திடீரென இரவு 7 மணியளவில் அன்புராஜின் உடலை உறவினர்கள் நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்று சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது திடீரென நான்கு பக்கங்களிலிருந்தும் போலீசார் வாகனங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனால், கும்பல் மற்றும் போலீசார் கலைந்து சென்றனர். கல் வீச்சில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
ராமநத்தம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு மண்டை உடைந்தது. அதன்பின், போலீசார், பொதுமக்கள் மீது, லேசான தடியடி நடத்தி, கலைத்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பதற்றம் காரணமாக கடலூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல் வீச்சு தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!