நில விற்பனை மோசடி.. பல லட்சங்களை சுருட்டிக்கொண்டு ஏமாற்றிய நபர் அதிரடியாக கைது!

 
கைது

வீட்டுமனை விற்பதாக பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவதாசன் (50). இவர் திரு.வி.க.நகரில் டீக்கடை நடத்தி வருகிறார். 2019ம் ஆண்டு புழல் அடுத்த லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான புழல் அடுத்த சூரப்பட்டு சர்வீஸ் சாலையில் 600 சதுர அடியில் வீடு வாங்க முடிவு செய்தார்.

மாதவரம்: புழல் காவாங்கரையில் தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு- எஸ்ஐ உட்பட 5  பேர் கைது|Inshorts

இதற்காக ரூ. 13 லட்சத்து 50 ஆயிரத்தை  பெற்றுக்கொண்ட மாரிமுத்து வீட்டுமனையை சிவதாசனுக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தியுள்ளார். இதனால் சிவதாசன் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து மாதவரம் நீதிமன்றத்தில் சிவதாசன் வழக்கு தொடர்ந்தார்.

வீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் ஒருவர் தீக்குளித்து தற்கொலை;  இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க புழல் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த புழல் போலீசார் நேற்று மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்