நூதன செல்போன் திருட்டு.. சுற்றி வளைத்து இளைஞர்களை தட்டித்தூக்கிய காவல்துறை!

 
பாலாஜி - ரோஷன்

சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அருகே இளைஞரிடம் செல்போன் பறித்த 2 திருடர்களை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). இவர் நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் ஸ்ரீதரின் செல்போனை பறித்து சென்றனர்.

Sriperumbudur, Kancheepuram : ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம்  புறவழிச்சாலையில் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி, லாரி  ஓட்டுனர் ...

அப்போது, ​​ஸ்ரீதர் திருடர்கள் என கூச்சலிடவே திருடர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். இதையடுத்து சென்னை நோக்கி தப்பிச் சென்ற இருவரையும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக போலீஸார் விரட்டி சென்றனர். உடனே போலீசார் வாக்கி டாக்கி மூலம் கொள்ளையர்கள் தப்பியது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த விறுவிறுப்பில், கனரக வாகனங்களுக்கு இடையே பைக்குடன் கொள்ளையர்கள் மறைந்திருந்ததைக் கண்டறிந்த போலீஸார், 2 பேரையும் சுற்றி வளைத்தனர். இதையறிந்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றபோது பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இருவரின் கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் , காவல்துறையினர் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, ​​அவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (22), எழும்பூர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் (22) என்பதும், இந்த 2 பேரும் காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரத்தில் 3 பேரிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் செயின் திருட்டு, கஞ்சா கடத்தல், பைக் திருட்டு என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்தது. கைதான 2 பேரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

 

From around the web