குடியரசு தின விழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த காவல் ஆணையர்…. அதிர்ச்சி வீடியோ!

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் மயங்கி சரிந்து கீழே விழுந்ததால் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல் ஆணையரை அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனை பார்த்த ஆளுநரும், அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கொடுங்கள். தண்ணீர் கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!