புஷ்பா - 2 பட ஹீரோ நடிகர் அல்லு அர்ஜூன் மீது காவல்நிலையத்தில் புகார்!

 
அல்லு அர்ஜுன்
 

புஷ்பா - 2 பட ஹீரோ நடிகர் அல்லு அர்ஜூன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் இம்மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக படம் தயாராகி உள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் படக்குழுவினர் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகின்றனர். 

அல்லு அர்ஜுன்

இந்நிலையில் மும்பையில் நடந்த புரமோஷனில் நிகழ்வில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன், “ரசிகர்களை ஆர்மி என்றும், ரசிகர்கள் தனது குடும்பத்தைப் போன்றவர்கள் என்றும் ‘புஷ்பா2’ படத்தின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் பேசியிருந்தார்.  

அதிர்ச்சி! பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா

இந்நிலையில் அல்லு அர்ஜூன் ரசிகர்களை ஆர்மி என்று அழைத்தது முறை கிடையாது என்றும் நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினரை மட்டுமே அப்படி அழைக்க வேண்டும் என்றும் ’க்ரீன் பீஸ் என்விரான்மெண்ட் அண்ட் வாட்டர் ஹார்வெஸ்டிங் ஃபவுண்டேஷன்’ தலைவர் ஸ்ரீனிவாசன் ஹைதராபாத், ஜவஹர் காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மீது புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!