பணி முடிந்து பைக்கில் திரும்பிய காவலர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி!
சேலம் மாவட்டத்தில் கோயில் கும்பாபிஷேகப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய காவலர், விபத்தில் சிக்கி லாரியின் சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த சம்பவம் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த தினேஷ் (38), சேலம் ஏத்தாப்பூரில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகப் பாதுகாப்புப் பணியை முடித்துக் கொண்டு, தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக தினேஷின் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த காவலர் தினேஷ், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
