அதிமுக பாஜக தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி... பரபரக்கும் அரசியல் அட்ராசிட்டி!

 
அதிமுக பாஜக

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 27ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கலில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகின்றார். 

பாஜக
இன்று நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் L.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால்  அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் காவல்துறையினரை கண்டித்து பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பாஜக


தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி உரையாற்றிய பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். அண்ணாமலையிடம் பேசிய நீலகிரி எஸ்.பி தனது வருத்தத்தை தெரிவித்த பிறகு பாஜகவினர்   போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web