போலீசார் தேடுதல் வேட்டை... போக்சோ குற்றவாளி சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பியோடி தலைமறைவு!
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில் வசித்து வருபவர் கோவிந்தன் மகன் வினித் என்ற ராமு (25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வினித், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக, செம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வினித்தை சிறையிலிருந்து இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த வினித் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதிலிருந்து குதித்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
