சினிமா பாணியில் குளத்திற்குள் பதுங்கியிருந்த குற்றவாளி... அலேக்காக தூக்கிய காவல்துறை!

 
கர்நாடகா

 கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி திலீப் என்பவரை போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்த இவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பத்ராவதி நியூ டவுன் போலீஸ் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அவரை வளைத்துப் பிடிக்க முயன்றனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ரவுடி திலீப் அங்குள்ள ஒரு பாழடைந்த குளத்திற்குள் குதித்து நீருக்குள் பதுங்கியிருந்த நிலையில், சாதுரியமாகச் செயல்பட்ட காவல் துறையினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.