தேர்தலில் வெற்றி பெற குவியும் அரசியல் பிரமுகர்கள்... களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!

 
திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு! திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெற்றிக்காக வேண்டி வழிபாடு நடத்தும் அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளதால், அரசியல் கட்சியினர் பலர் தங்களுக்கு சீட் வேண்டி விருப்ப மனு அளித்துள்ளனர்.

விருப்ப மனு அளித்தவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குப் படையெடுத்து வருகின்றனர். கூட்டம் இல்லாத நேரங்களில் சத்தமில்லாமல் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், முருகன் சூரனை சம்ஹாரம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால், குரு அருளால் வெற்றி பெற வேண்டி அரசியல் பிரமுகர்கள் தங்களது விருப்ப மனுக்கள் மற்றும் வேட்பு மனுக்களுடன் வந்து பூஜை செய்கின்றனர்.

சிலர் எதிரிகளை வீழ்த்த 'சத்ரு சம்ஹார யாகம்' நடத்தியும் வழிபாடு செய்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டமும், மற்ற நாட்களில் அரசியல் பிரமுகர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால் கோயில் வளாகம் களைகட்டியுள்ளது. அரசியல் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் வழிநெடுகிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.