அரசியலில் பரபரப்பு... அதிமுக உட்கட்சி விவாகரத்தில் இதுவரை நடந்த வாதம்.... முழு தகவல்கள்!

 
இபிஎஸ் ஒபிஎஸ்

 தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவில்  உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் தடையில்லை எனவும், ஏற்கனவே இதற்கு  விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர்  தாக்கல் செய்த மனுக்கள் மீது  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய இபிஎஸ்  மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இபிஎஸ் ஒபிஎஸ்

தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் வெளியாகியுள்ளன.அதன்படி  புதிய தலைமை தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. கட்சியில் எந்த பிளவும் இல்லை. எனக்கான ஆதரவு அப்படியே நீடிக்கிறது.

இபிஎஸ், ஓபிஎஸ்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு இழப்பு என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தது. ரவீந்திரநாத் தரப்பு வைத்த வாதத்தில், பெரும்பாலானோர் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். தேர்தல் ஆணையம் இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கூடாது. தங்கள் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் முன்னரே தேர்தல் ஆணைய விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்துள்ளார் என கூறப்பட்டது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!