தோட்டத்தில் புகுந்து 5 கோழிகளை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு... பரபரப்பு வீடியோ!

 
மலைப்பாம்பு

 

பொள்ளாச்சி அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த ராட்சத மலைப்பாம்பு, கோழிக்கூட்டில் இருந்த 5 கோழிகளை அடுத்தடுத்து விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிகளை விழுங்கியதால் நகர முடியாமல் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

கோழிக்கூட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நரிக்கல்பதி பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள கோழிக்கூட்டுக்குள் இன்று ராட்சத மலைப்பாம்பு புகுந்தது. பின்னர், கூட்டில் இருந்த 5 கோழிகளையும் அடுத்தடுத்து விழுங்கியது.

இதையடுத்து அங்கிருந்து செல்ல முயன்ற மலைப்பாம்பால் நகர முடியவில்லை. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், அதை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு 5 கோழிகளை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.