மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு - படகுகளில் செல்லும் தேர்தல் குழுவினர்!

 
வாக்கு எண்ணிக்கை காவல் தேர்தல் மையம் பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை காவல் தேர்தல் மையம் பாதுகாப்பு

மேற்கு வங்க மாநிலச் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 29, 2026) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில், முதற்கட்டமாக 152 இடங்களுக்குப் கடந்த ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு முடிந்தது. நாளை மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கொல்கத்தா (வடக்கு மற்றும் தெற்கு), வட மற்றும் தென் 24 பரகணாக்கள், ஹவுரா உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இக்கட்டத்தில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு... 2 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வம்!

சந்தேஷ்காலி போன்ற சுந்தரவனக் காடுகளை ஒட்டியுள்ள தொலைதூர ஆற்றுப் பகுதிகளுக்குச் சாலை வசதி இல்லாததால், தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் படகுகள் மூலம் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

நெரிசலான நகர்ப்புறங்களில் உயரமான கட்டிடங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையைத் தவிர்க்க வரலாறு காணாத வகையில் சுமார் 2,450 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 'வெப்காஸ்டிங்'  மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்படும்.

தேர்தல் வடமாநில வாக்குப்பதிவு மேற்கு

முதல் கட்டத் தேர்தலில் 93.19% என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவு பதிவான நிலையில், இரண்டாம் கட்டத்திலும் அதே போன்ற எழுச்சியைத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி உள்ளிட்ட பல நட்சத்திரத் தொகுதிகள் நாளை தேர்தலைச் சந்திக்கின்றன.

தமிழகத்தில் கடந்த வாரம் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் இந்த இறுதிக்கட்டத் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ளன.