கண்டெய்னர் லாரி மீது பைக் மோதியதில் தலைநசுங்கி பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு!

சென்னை பூந்தமல்லியில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, செட்டிப்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அப்பு (எ) மோகன பிரசாத் (19), அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் தனது நண்பர் கிருஷ்ணசாமி (19) என்பவருடன் பிரகாஷ், பைக்கில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். பைக்கை மோகன பிரசாத் ஓட்டி சென்ற நிலையில், பின்னால் கிருஷ்ணசாமி அமர்ந்து இருந்தார்.
இவர்களது பைக் பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாப்பான்சத்திரம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் சென்றுக் கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பிரசாத் கீழே விழுந்தார். கீழே விழுந்த பிரசாத் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் கிருஷ்ணசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!