ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்', '3 பீர் வாங்கினால் உணவு இலவசம்... கலால் துறை மதுபான பாருக்கு சீல் !
புதுச்சேரியில் கலால் விதிகளை மீறி, சமூக வலைதளங்களில் மதுபானங்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த மதுபானக் கடை மற்றும் ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மதுபானங்களுடன் இலவசமாகப் பீர் மற்றும் உணவு வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில், “ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்”, “3 பீர் வாங்கினால் உணவு இலவசம்” போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த விளம்பரங்கள் கலால் விதிகளுக்கு எதிரானவை எனக் கருதிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கலால் விதிகளை மீறி சலுகை விளம்பரங்கள் செய்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மதுபானக் கடைகள் மற்றும் ரெஸ்டோ பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை புதுச்சேரியில் உள்ள மதுபான விற்பனை நிறுவனங்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
