பொங்கல் 2027: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை… கோ-ஆப்டெக்ஸ் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

 
சேலை

 

தமிழகத்தில் பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆடைகளை மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல லாரிகள் வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி, ஈரோடு நசியனூர் மஞ்சள் வளாகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொங்கல் 2027 திட்டத்திற்கான வேட்டி, சேலைகளைத் தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல இந்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டணத்துடன் ஆடைகளை ஏற்றுதல், இறக்குதல் ஆகிய பணிகளுக்கான கூலியும் இதில் அடங்கும்.

எத்தனை பேருக்கு கிடைக்கும்?

தமிழகத்தில் சுமார் 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இதற்காக 177.64 லட்சம் சேலைகளும், 177.22 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கும் ஆடைகள் வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பரிசு 2027: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! புதிய வேட்டி சேலை அப்டேட் | Pongal Parisu | Daily Trending | Facebook

இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ.642.88 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடைகள் தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு முன்பாகப் பயனாளிகளிடம் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதே அரசின் இலக்காகும்