பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல தயாரா? ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டுள்ள ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2027-ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கு முந்தைய ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) தொடங்கியுள்ளது.

அதன்படி, ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.
ரயில்களில் இருக்கைகள் விரைவாக நிரம்ப வாய்ப்புள்ளதால், சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்வது நல்லது.

தொடர்ந்து, ஜனவரி 13-ஆம் தேதி பயணிக்க நவம்பர் 14-ஆம் தேதியும், ஜனவரி 14-ஆம் தேதி பயணிக்க நவம்பர் 15-ஆம் தேதியும், ஜனவரி 15-ஆம் தேதி பயணிக்க நவம்பர் 16-ஆம் தேதியும் முன்பதிவு தொடங்கும்.
பொங்கல் பண்டிகை பயணத்திற்கான டிக்கெட்டுகளைத் தவறவிடாமல் முன்பதிவு செய்ய பயணிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
முன்பதிவு தேதிகள்
| பயண தேதி |
முன்பதிவு தொடங்கும் தேதி |
|---|---|
| ஜனவரி 12, 2027 |
நவம்பர் 13, 2026 |
| ஜனவரி 13, 2027 |
நவம்பர் 14, 2026 |
| ஜனவரி 14, 2027 |
நவம்பர் 15, 2026 |
| ஜனவரி 15, 2027 |
நவம்பர் 16, 2026 |
