பொங்கல் பண்டிகை எதிரொலி: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!

 
ஆம்னி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் மண்டல வாரியாகப் புகார் எண்களை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சில தனியார் ஆம்னி பஸ்கள் 'கட்டணக் கொள்ளையில்' ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தடுக்க, தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கவும், தேவையெனில் வாகனங்களைச் சிறைபிடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

புகார் அளிப்பது எப்படி?
பொதுமக்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவாகவோ (Voice Note) புகார் அளிக்கலாம்.

மண்டல வாரியான புகார் எண்கள்: 1ஆணையரகம், சென்னை (கட்டணமில்லா எண்)1800 425 61512சென்னை (வடக்கு)99442 534043சென்னை (தெற்கு)97905 500524மதுரை90953 663945கோயம்புத்தூர்91235 939716விழுப்புரம்96773 988257வேலூர்98400 230118சேலம்78456 364239ஈரோடு80569 4004010திருச்சிராப்பள்ளி90660 3234311விருதுநகர்90257 2380012திருநெல்வேலி96981 1801113தஞ்சாவூர்95850 20865