பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்!

 
பொங்கல்

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்களுக்குக் கடந்த ஆண்டை விட உயர் தரத்திலான வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் எம். விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக ரூ. 300 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

பொங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், குடும்பத்தில் உள்ள உடன்பிறந்த சகோதரிகளுக்கு வழங்குவது போன்ற சிறந்த தரம் மற்றும் வடிவமைப்பில் வேட்டி-சேலைகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.