பொங்கல் பரிசுத் தொகுப்பு - ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வரை வழங்கக் கோரிக்கை!
Sep 9, 2026, 07:24 IST
2027-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பரிசாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குத் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

போதிய மழையின்மை காரணமாகக் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கப் பொங்கல் பரிசாக ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காகத் தேவையான கரும்புகளை இடைத்தரகர்களின்றி அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
