நிறைவுக்கு வருகிறது பொங்கல் விடுமுறை... சென்னை திரும்ப இன்று 3,412, நாளை 4,302 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை தினங்களை சொந்த ஊரில் கழிக்க சென்றவர்கள், விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப இன்று 3,412 பேருந்துகளும், நாளை 4,302 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்காக இந்த ஆண்டு 10,11,12,13 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 8.73 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததை தொடர்ந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற பெரும்பாலானோர் நேற்று முன் தினம் முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளனர். இதை யொட்டி பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் ஜன.19ம் தேதி வரை, சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,290 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், "2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும். பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15.866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக. 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,290 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பஸ்கள் இயக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், 17.01.2025 அன்று 28.022 பயணிகளும். 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42.917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். எனவே. பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, 19.01.2025 பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்து (KCBT) மா.போ. கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், 20.01.2025 அன்று கிளாம்பாக்கத்தில் (KCBT) பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பாக்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 19.01.2025 அன்று பிற்பகல் முதல் 20.01.2025 வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம். தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு. MMBT. செங்குன்றம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகிய முக்கிய பஸ் நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!