மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி!

 
பொன்முடி

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2016ல்  பொன்முடியை விடுதலை செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

பொன்முடி

 உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது.  பொன்முடி எம்எல்ஏவாக தொடர்ந்து நீடிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், தீர்ப்பின் நகலுடன், பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். குற்றவாளி என்று தீர்ப்பு வரவில்லை என்று காரணமும் கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் மறுத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

பொன்முடி

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி, ஆளுநர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மறுக்கிறாரா? அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஏன் செயல்படுகிறார்? அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என்றும், பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்து, இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது நடவடிக்கை என்ன என்பதை இப்போது நாங்கள் கூறப்போவது இல்லை’’ என்று ஒரு நாள் ஆளுநருக்கு அவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web