தளபதியின் வெற்றியை முன்கூட்டியே கணித்த பூஜா ஹெக்டே... வைரலாகும் வீடியோ!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட நாயகி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் இந்த அரசியல் வெற்றியைத் தான் ஏற்கனவே கணித்திருந்ததாக அவர் அதில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் வெற்றியை முன்பே கணித்த பூஜா ஹெக்டே... வைரல் வீடியோ! pic.twitter.com/VuyMTs2mOf
— Dina Maalai (@DinaMaalai) May 5, 2026
விஜய்யின் வெற்றி குறித்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள பதிவில், "நடப்பதற்கு முன்பே நான் அதைச் சரியாகக் கணித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்? உங்களது கனவுகள் நனவாகியிருப்பதற்கு வாழ்த்துகள் விஜய் சார்!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், மக்கள் விஜய் மீது வைத்துள்ள அளப்பரிய அன்பிற்கு இந்த மாபெரும் வெற்றியே ஒரு மிகச்சிறந்த சான்று என்றும் அவர் பாராட்டியுள்ளார். இதனுடன் அவர் பகிந்துள்ள வீடியோ, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தில் அவருக்கு ஜோடியாகப் நடித்துள்ள பூஜா ஹெக்டே, படப்பிடிப்புத் தளத்திலேயே விஜய்யின் மக்கள் செல்வாக்கைக் கண்டு வியந்ததாகப் பலமுறை தெரிவித்துள்ளார். தற்போது விஜய் அரியணை ஏறவுள்ள நிலையில், அவரது உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றியாக இதைப் பார்ப்பதாக பூஜா ஹெக்டே தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த வைரல் வீடியோ விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
