காதலருடன் பைக்கில் அட்வெஞ்சர் டூர்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள்

 
காதலருடன் பைக்கில் அட்வெஞ்சர் டூர்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள்

நடிகை பூனம் பாஜ்வா தனது காதலர் சுனில் ரெட்டியுடன் மலை பிரதேசங்களில் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

காதலருடன் பைக்கில் அட்வெஞ்சர் டூர்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள்

தென்னிந்திய மொழிகளில் சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அவர் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய ஹிட் தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் சரிவர ஹிட் கொடுக்காததால் மார்க்கெட்டை இழந்தார். தற்போது சில படங்களில் கவர்ச்சி நடிகையாகவும், பாடல்களுக்கும் ஆட்டம் போட்டு வருகிறார்.

காதலருடன் பைக்கில் அட்வெஞ்சர் டூர்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள்

இருப்பினும் இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது டிரெண்டிங்கிலும் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது பூனம் பாஜ்வா தனது காதலர் சுனில் ரெட்டியுடன் பைக்கில் டூர் சென்றுள்ளார். பைக்கர்ஸ் அட்வெஞ்சர் டூருக்காக செல்லும் கரடுமுரடான மலைப்பாதைகளில் இந்த ஜோடியும் சுற்றி வருகிறது. அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பூனம் பாஜ்வா தனது இண்ஸ்டாகிராமில் பகிரவே, அவை தற்போது வைரலாகி வருகின்றன.

காதலருடன் பைக்கில் அட்வெஞ்சர் டூர்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள்

பூனம் பாஜ்வா கடந்த ஆண்டு சுனில் ரெட்டி என்பவரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். அவர்களுக்கு இன்னும் திருமணமாகத நிலையில் மலைபிரதேசங்களில் சுற்றி வரும் அந்த ஜோடியை ‘அதுக்குள்ள ஹனிமூனா’? என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web