நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை | சென்னையில் புதிய மைல்கல்!

 
மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையேயான முதல் மெட்ரோ ரயில் சேவை நாளை அக்டோபர் 11ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்படவுள்ளது.

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களின் பயணத்திற்காக இயக்கப்படுகிறது.

மெட்ரோ

நாளை மறுநாள் அக்டோபர் 12ம் தேதி முதல், இத்தடத்தில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கமான சேவைகள் முழுமையாகத் தொடங்குகின்றன. அலுவலகம் மற்றும் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் நேரங்களில் கூட்ட நெரிசலைக் தவிர்க்கும் வகையில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

விடுமுறை நாட்கள் மற்றும் பயணிகள் நெரிசல் இல்லாத மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மெட்ரோ

இந்த புதிய சேவையால் பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையேயான போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.