பிரிஞ்சி சாதத்தில் இறந்து கிடந்த பூரான்.. அலட்சியம் காட்டிய சாலையோர கடைக்காரர்!

 
பிரிஞ்சி சாதத்தில் பூரான்

திருவொற்றியூர், காலடிப்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி அருகே சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சி சாதத்தில் பூரான் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருவொற்றியூர் காளத்திப்பேட்டை மார்க்கெட் தெருவில் உள்ள டிபன் கடையில்  ஏழை தம்பதி  தங்களது குழந்தைக்கு மதிய உணவுக்காக பிரிஞ்சி சாதம் வாங்கி  வீட்டிற்கு கொண்டு சென்றார். பின்னர், டிபன் பாக்ஸில் வைக்க முயன்றபோது, சாதத்தில்  இறந்து கிடந்த பூரான் ஒன்று கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடைக்காரரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு பிரிஞ்சி சாதம் திருப்பி கொடுத்துள்ளார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் பரவியதையடுத்து, அந்த கடையில் பிரிஞ்சி சாதத்தை வாங்கிய பலர், அதை மீண்டும் கொண்டு வந்து கொடுத்தனர்.பின்  உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கடைக்காரர் உரிமம் பெறாமல் கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை, கடையை முறையாக நடத்த வேண்டும் என எச்சரித்து, அதற்கான நோட்டீசும் வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web