போப் ஆண்டவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை - வாடிகன் அதிகாரப்பூர்வ தகவல்!

 
போப்

கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய மதத்தலைவரான போப் லியோவின் நுரையீரலில் சிறிய முடிச்சு கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு இந்த வாரம் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது நுரையீரலில் சிறிய முடிச்சு ஒன்று ஆரம்பகட்டத்திலேயே கண்டறியப்பட்டதாகப் புனித பேதுரு சதுக்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் போப் ஆண்டவர் (வயது 71) நேற்று தெரிவித்தார். ரோமில் உள்ள புகழ்பெற்ற கெமெல்லி மருத்துவமனையில் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

போப் லியோ

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஒரு வாரம் முழுமையான ஓய்வெடுப்பார் என்று வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அவரது திட்டமிடப்பட்ட அடுத்த மாத தென் அமெரிக்கப் பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.