பிரபல நடிகர், பின்னணி குரல் கலைஞர் திடீர் மரணம்.. ரஜினி, அஜீத், விஜய்க்கு குரல் கொடுத்தவர்!

 
தேவன்குமார்

ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற ஹீரோக்களுக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்கும் தேவன்குமார் சென்னையில் நேற்று காலமானார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மெகா தொடரான ‘நாயகி’யில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பை தொடங்கியவர்  தேவன்குமார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

 

தேவன்குமார்


கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் சிம்பு போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர். மறைந்து நடிகர் விஜயகாந்துக்கு நன்கு பரிட்சமான நண்பர் தேவன்குமார். பல படங்களில் நடிகர் விஜய்காந்துக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர்.  இந்நிலையில், உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த தேவன்குமார், சிகிச்சைப் பலனளிக்காமல் சென்னையில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது.