படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு எலும்பு முறிவு.. மருத்துவமனையில் அனுமதி!

 
கார்த்திக் ஆர்யன்

மும்பையில் நடைபெற்று வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு முழங்காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடந்து வந்தது. இதில் இடம்பெற்ற ஆபத்தான சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது, கார்த்திக் ஆர்யனின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. கார்த்திக் ஆர்யன் மும்பையில் உள்ள போர்ட்டிஸ் ரஹேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சில காலம் ஓய்வில் இருக்கவுள்ளார். பூரண குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.