திமுக வேட்பாளருக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகை... வில்லிவாக்கத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

 
விஜயலட்சுமி விஜயலட்சுமி

 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து, நடிகை விஜயலட்சுமி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லிவாக்கம் பகுதிகளில் திறந்த வேனில் சென்றபடி பொதுமக்களிடையே பேசிய நடிகை விஜயலட்சுமி, கார்த்திக் மோகனின் எளிமையைக் குறிப்பிட்டுப் பேசினார்:

"கார்த்திக் மோகன் மக்களின் குறைகளைக் கேட்க எப்போதும் தயாராக இருப்பவர். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதைத் தாண்டி, உங்களில் ஒருவராக இருப்பார். தொகுதி மக்களின் தேவைகளைத் தீர்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்."

விஜயலட்சுமி

"அவர் வீட்டு கதவு மக்களுக்காக 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகி உங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். அத்தகைய நல்ல மனிதருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்," என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

நடிகை விஜயலட்சுமியின் வருகையால் வில்லிவாக்கம் தொகுதி திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வேட்பாளர் மற்றும் நடிகை விஜயலட்சுமிக்கு வரவேற்பு அளித்தனர்.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

வில்லிவாக்கம் தொகுதியில் ஏற்கனவே திமுக வலுவாக உள்ள நிலையில், திரைப்பிரபலங்களின் இந்தப் பிரச்சாரம் வாக்கு சதவீதத்தை மேலும் உயர்த்தும் என உடன்பிறப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.