பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் கைது... அக்.13க்குள் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய நீதிமன்றம் கெடு!

 
இந்தி காமெடி நடிகர் ராஜ்பால்

பாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ் தொடர்பான செக் மோசடி வழக்கில், உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'அதா பட லாபதா' திரைப்பட தயாரிப்புக்காகப் பெறப்பட்ட கடன் விவகாரத்தில் ரூ. 9 கோடி செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவ் வரும் அக்டோபர் 13-ம் தேதிக்குள் ரூ. 2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தில் ரூ. 1.15 கோடி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.85 லட்சத்தை நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் செலுத்த வேண்டும்.

நீதிமன்றம் விதித்த இந்தக் கெடுவுக்குள் மீதமுள்ள தொகையைச் செலுத்தத் தவறினால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.