பிரபல ஸ்டார் நடிகை கர்ப்பம்... குவியும் வாழ்த்துகள்!

 
கர்ப்பம்

கடந்த சில வாரங்களாக தீபிகா படுகோனே- ரன்வீர் சிங்கின் குழந்தைப் பிறப்பு செய்திதான் தீயாய் பரவிக் கொண்டிருந்தது. இந்த செய்தியை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்க ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக தீபிகா படுகோனே- ரன்வீர் சிங்கின் குழந்தைப் பிறப்பு செய்திதான் தீயாய் பரவிக் கொண்டிருந்தது. இந்த செய்தியை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்க ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

கர்ப்பம்
பிரபலங்களின் காதல், திருமணம், குழந்தைப் பிறப்பு என அவர்களின் பர்சனல் வாழ்க்கையிலும் ரசிகர்கள் ஈடுபாடு காட்டுவது வழக்கம். அந்த வகையில், பலருக்கும் பிடித்த பாலிவுட் நட்சத்திர ஜோடி தீபிகா- ரன்வீர். இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், ’குழந்தை எப்போது?’ என்ற செய்தி இவர்களையும் துரத்த ஆரம்பித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த ஜோடி இத்தாலியில் கோலாகலமாகத் திருமணத்தை முடித்தது. திருமணம் முடிந்தாலும் இருவரும் தங்களது கரியரிலும் பிஸியாக இருந்தனர். 


சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் நடிகை தீபிகா கலந்து கொண்டார். அதில் தனது வயிற்றுப்பகுதியை பெரும்பாலும் மறைத்தபடியே இருந்தார். மேலும், சில புகைப்படங்களில் எல்லாம் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை பார்க்கும்போதே தெரிகிறது என ரசிகர்களும் சொல்லி வந்தனர். தீபிகா- ரன்வீர் ஜோடி குழந்தைப் பெறப்போகும் செய்தியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என வட இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வந்தது. அதன்படி, இன்று காலை சமூகவலைதளப் பக்கத்தில் தீபிகா கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இருவரும் குழந்தையை இந்த வருடம் செப்டம்பர் மாதம் எதிர்பார்ப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். 
தீபிகா- ரன்வீர் இருவருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

From around the web