பிரபல தமிழ்பட இயக்குநர் திடீர் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!

 
இயக்குநர் பிரபு ஜெயராம்

பிரபல இயக்குநர் பிரபு ஜெயராம் திடீரென நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், மிக எளிமையாக திருமணம் செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகளில் படங்கள் வெளியாவதில் சிக்கல் இருந்த நிலையில், சோனி லைவ் ஓ.டி.டியில் வெளியான 'என்னங்க சார் உங்க சட்டம்' திரைப்படத்தை இயங்கியவர் பிரபு ஜெயராம். ஆர்.எஸ்.கார்த்தி நடித்துள்ள என்னங்க சார் உங்க சட்டம் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

என்னங்க சார் உங்க சட்டம் | Tamil cinema ennanga sir unga sattam movie  preview

முக்கியமாக இப்படத்தில் இட ஒதுக்கீடு குறித்து ஆழமாக பேசப்பட்டது. கொரோனா காரணமாக திரையிடுவதில் அப்போது கொஞ்சம் சிக்கல் இருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.  இதனையடுத்து பிரபு ஜெயராமின் அடுத்த பட அப்டேட்டுக்காக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் தான், அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சென்னையில்  இயக்குநர் பிரபு ஜெயராம், தீபா என்பவரை பெரும் ஆடம்பரமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web