ஆன்லைன் டிரேடிங் மோசடியில் பிரபல யூடியூபர் கைது.... !

 
விஷ்ணு
 


 

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருபவர் விஷ்ணுகுமார். இவரது மனைவி ஒப்பனை கலைஞர் அஸ்மிதா. இவர்களுக்கு  2017 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று  கருத்து வேறுபாடு காரணமாக 2020 இரண்டாம் ஆண்டு பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர். தற்பொழுது அஷ்மிதாவிற்கு 3 வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே Forexஆன்லைன் டிரேடிங் பண மோசடி, நண்பரின் தங்கைகளிடம் ஆபாச வார்த்தையில் மெசேஜ் அனுப்பி பேசியது உட்பட பல  புகார்களால் விஷ்ணுகுமார் அடுத்தடுத்து சிக்கினார்.
 


மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டகிராம் பெண்களுடன் இரட்டை அர்த்தம் பேசி அடிவாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனையடுத்து youtube சேனல்களில் தனது மணைவிக்கும் ஏடிஜிபி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அஸ்மிதா படங்களில் நடித்தவர் என்றும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  
இந்நிலையில் தன்னை பற்றி தகாத முறையில் அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் youtube சேனல்களில் பரப்பி வருவதாக விஷ்ணுகுமார் மீது அவரது மனைவி அஸ்மிதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் பண மோசடி நம்பிக்கை மோசடி தாக்குதல் உட்பட பல  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் ஒப்பனை கலைஞர் அஸ்மிதா காரை வழிமறித்து சாலையில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளாலும், ஆபாச செய்கைகளை காட்டி விஷ்ணுகுமார் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விஷ்ணுகுமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஷ்ணு


இந்நிலையில், தற்பொழுது Forex ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் instagram பிரபலம் விஷ்ணுகுமார் மற்றும் அவரது மனைவி அஸ்மிதா தன்னிடம் மோசடி செய்ததாக கூறி சென்னை காவல் ஆணையத்தில் சந்திரசேகரன் என்பவர் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்களிடம் விஷ்ணுகுமார் மற்றும் அஸ்மிதா தனித்தனியாக பழகி பணம் பெற்று மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் Forex ஆன்லைன் ரேட்டிங் மூலம் தன்னிடம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மத்திய பிரிவு பிரிவு காவல் துறையினர் இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணுகுமார் ஒப்பனை கலைஞர் அஸ்மிதா அவரது தாய் ஆனந்தி மற்றும் தங்கை   மீது வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக ஆன்லைன் ரேட்டிங்கில் தன் பெயரை பயன்படுத்தியதாக ஒப்பனை கலைஞர் அஸ்மிதா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் instagram பிரபலமான விஷ்ணுகுமார் ஏற்கனவே நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் டிரேடிங் மூலம் சுமார் 1.62 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு  மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.