பிரபல யூடியூபர் வில்லேஜ் குக்கிங் தாத்தா மருத்துவமனையில் அனுமதி!

 
வில்லேஜ் குக்கிங்

 பிரபல யூடியூப் சேனல்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’. இந்த சேனலில் youtube தளத்தில் மிகப் பிரபலமான சமையல் குறித்து விளக்கங்களை தமிழில் தரும் சேனலாக திகழ்ந்து வருகிறது.  இந்த வீடியோக்களில்  பெரியவர் பெரிய தம்பிக்கு அவர் சமைப்பதை விட அவரின் மாடுலேஷன்ஸ்க்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த சேனலை அவர் தனது குழுவினர் மற்றும் பேரனுடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்த சேனல் மிகக் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தது. ராகுல் காந்தி தமிழகத்தில் நடந்த பாதயாத்திரையின் போது இவர்கள் குழுவினருடன் கலந்து கொண்ட வீடியோ மில்லியன் கணக்கான ஃபாலோயர்ஸ்களிடம் வரவேற்பை பெற்றது.  விக்ரம் திரைப்படத்தில் இவர்கள் குழுவினருடன் சமையல் செய்வது போல் நடித்திருந்ததும் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.  

வில்லேஜ் குக்கிங்


இந்நிலையில் பெரியவர் பெரியதம்பியின் பேரன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவில்  "தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!" என பதிவிட்டிருந்தார். இத்தகவலால் ஃபாலோயர்ஸ் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web