பகீர்... போர்ச்சுக்கலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட பெண் மதுபானக் கடையில் விற்பனை!

 
போர்ச்சுக்கல்

மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருபத்தெட்டு வயது நாக்பூர் பெண் போர்ச்சுக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்ஸ்டாகிராம் மூலமாக வி மைக்ரேட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு வேலைக்காகப் பதினொரு லட்சம் ரூபாயை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சென்ற பிறகு அந்தப் பெண் மதுபானக் கடையில் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கலில் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு அங்கிருந்து எப்படியோ தப்பித்து பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று தன் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் குறித்துப் புகார் அளித்துள்ளார்.

Fraud Job Offers (Photo: Unsplash)

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிரமான விசாரணையைத் தொடங்கினா். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.