இன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்!!

 
கவுன்சிலிங்

தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.  

கலந்தாய்வு

எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கான 2023-2024ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது ஜூலை 6 முதல் 17 வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர்   எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கலந்தாய்வு

எம்.டி.எஸ். படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.  இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத்துறை https://mcc.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இன்று ஆகஸ்ட் 7ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web