ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் இந்த பகுதிகளில் அஞ்சலகங்கள் செயல்படாது!

 
அஞ்சலகம்
 


 
தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால்  சென்னை கோட்டத்துக்கு உட்பட  24 அஞ்சலகங்கள் ஆகஸ்ட் .2, 3  தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில்  வெளியிட்ட செய்திக் குறிப்பில்  எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருளை  அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. 

அஞ்சலகம்

இந்த புதிய தொழில்நுட்பத்தை ஆகஸ்ட் 4ம் தேதி முதல் சென்னை கோட்டத்துக்குட்பட்ட 24 அஞ்சலகங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் மாற்றும் பணிகள் ஆகஸ்ட் 2, 3  தேதிகளில் நடைபெறவுள்ளன.

அஞ்சலகம்
அந்த நாட்களில் சென்னை தியாகராய நகா், மயிலாப்பூா், சூளைமேடு, தேனாம்பேட்டை , திருவல்லிக்கேணி, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், ராயப்பேட்டை , தியாகராயநகா் வடக்கு உட்பட மொத்தம் 24 அஞ்சலகங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.