குறைந்த கட்டணத்தில் பார்சல் சேவை... அஞ்சல் துறையின் அதிரடி அறிவிப்பு!

 
அஞ்சல் அஞ்சல்

இந்திய அஞ்சல் துறை தனது பார்சல் சேவைகளை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி வழங்கி வருகிறது. இந்த சிறப்பான சேவைகளை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பார்சல்களைப் பெறுபவர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதி மற்றும் ரகசிய குறியீடு அடிப்படையிலான விநியோக முறை போன்றவை பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

வணிக ரீதியாக அதிக அளவில் பார்சல்கள் அனுப்புவோருக்கு அஞ்சல் ஊழியர்களே நேரில் வந்து பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தியா முழுவதும் பார்சல்களை அனுப்ப ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்படுவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிதிச் சுமையை குறைக்கிறது. பதிவு செய்யப்பட்ட பார்சல்கள் எங்குள்ளது என்பதை இணையதளம் மூலம் உடனுக்குடன் கண்காணிக்கும் வசதியும் அஞ்சல் துறையினால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேகமாகப் பார்சல் கட்டும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கும் பார்சல்களை அனுப்பும் வசதி உள்ளதால் சிறு குறு தொழில் முனைவோர் இதனைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் 9841875710 மற்றும் 9791655030 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.