தபால் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடக்கம்... களைகட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!

 
தபால் வாக்குப்பதிவு


தமிழகத்தில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது.  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.   இந்த தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிடுவதில்  திமுக, நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
முதியோர் தபால் வாக்கு வோட்டு தேர்தல்
இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு   நடைபெற்று வருகிறது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று  தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தபால் ஓட்டு


இன்று  காலை 8 மணி முதல் மாலை 5 மணி தபால் வாக்கு பெறப்படுகிறது.  4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்  துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் தபால் வாக்குகளை பெறும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தபால் வாக்குகள் ஜனவரி 27ம் தேதி வரை பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!