நாளை நடைபெற இருந்த கோழிக்கறி வணிகர்களின் போராட்டம் வாபஸ்.. .பிரியாணி பிரியர்கள் மகிழ்ச்சி!

 
சிக்கன் கோழி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ஜூலை 31 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோழிக்கறி வணிகர்களின் காலவரையற்ற விற்பனை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சிக்கன் கோழி  கறி

கோழித் தீவனக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வலியுறுத்தியும், கொள்முதல் விலை ஏற்ற இறக்கங்களைக் சீரமைக்கக் கோரியும் கோழிக்கறி வணிகர்கள் சங்கம் சார்பில் இந்தப் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

வணிகர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனை தொடர்பாகக் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்தி உரிய உத்தரவாதம் அளித்துள்ளது.

இறைச்சி கோழி சிக்கன் கறிக்கோழி

கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு அளித்த திருப்திகரமான உத்தரவாதத்தின் அடிப்படையில், திட்டமிட்ட போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக வணிகர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் கோழிக்கறி கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.