பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம்–திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்

 
 சிறப்பு ரயில்

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலத்தில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம்–திருவண்ணாமலை இடையே அக். 25, 26 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை

விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்குப் புறப்படும் ரயில் (06130), காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் (06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

திருவண்ணாமலை கிரிவலம்

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்கள், கிரிவலத்துக்குச் செல்லும் பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்க உதவும்.