இன்று தமிழகத்தில் கோவை, தஞ்சை உள்ளிட்ட இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதால், முக்கிய நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் இன்று  காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மின்வாரியத்தின் அவசர அறிவிப்பின்படி, கொங்கு மண்டலம்: கோவை மாநகரின் சில முக்கியப் பகுதிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதிகள், ஐயம்பாளையம் , வித்தல்நாயக்கன்பட்டி மற்றும் தேனி மாவட்டத்திற்குட்பட்ட தேவாரம் ஆகிய பகுதிகள். திருவண்ணாமலை , பெரம்பலூர்  மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள். மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

மின் தடை

அறிவிக்கப்பட்டுள்ள இந்த மின்தடையானது இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 அல்லது 5:00 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்கூட்டியே நிறைவடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் சீரமைக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கான குடிநீர்ச் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.