நாளை சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள்... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின்சார நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” சென்னையில் நாளை நவம்பர் 26ம் தேதி காலை முதல் பிற்பகல் 2மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் தடையின்றி மின்விநியோகம் கொடுக்கப்படும்.
மீஞ்சூரில் மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு- மீஞ்சூர்நகர், தேரடிதெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம்/அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு. தேனாம்பேட்டை பகுதியில் போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை
இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, ஆர்.டி.ஓ.டி, கதீட்ரல் சாலை, ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர்.ரோடு பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி & முர்ரேஸ் கேட் சாலை." எனக் கூறப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!