சென்னையின் பல பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் பகுதி வாரியாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் பாலாஜி நகர், சக்திவேல் நகர், தணிகாசலம் நகர் உட்பட பல இடங்களில் மின்தடை ஏற்படும் எனவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி சென்னையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் சென்னையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பது பற்றிய தகவலையும், தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை, பாலாஜி நகர், சக்திவேல் நகர், தணிகாசலம் நகர், திருப்பதி நகர், யுனைடெட் காலனி, ஆர்.எச்.ரோடு, ஸ்ரீநகர் காலனி, திருமலை நகர், அஞ்சுகம் நகர், விவேக் நகர், கே.எஸ்.நகர், செல்லியம்மன் நகர், அம்பேத்கர் நாகை ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!