இன்று இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

 

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இன்று காலை முதல் மின் விநியோகம் தடைபட வாய்ப்புள்ள மாவட்டங்களாக சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், கடலூர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.காலை 9:00 மணி முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்பதால் முன்கூட்டியே மின்சாரம் தொடர்பான வேலைகளை முடிச்சிடுங்க. பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்தவுடன், மாலை 4 மணி அல்லது 5 மணிக்குள் மின் விநியோகம் படிப்படியாகச் சீரமைக்கப்படும்.

துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் இந்த நேரத்தில் நடைபெறவுள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு மின்சார வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.