திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 16 பேர் பலி; 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்!

 
திபெத் நிலநடுக்கம்

திபெத்தின் வடக்குப் பகுதியான நாகு மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 முதல் 18 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாகப் புவியியல் மையங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம்

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தின் அதிர்வால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் தரைமட்டமாகிப் பெரும் சேதமடைந்துள்ளன.

நிலநடுக்கம் கூகுள்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, 1,600-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான தற்காலிகக் கூடாரங்கள், கம்பளிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.