பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் - ரேடியோ சிக்னல்கள் பாதிப்பு!
Oct 12, 2026, 07:50 IST
சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு மற்றும் கொரோனல் மாஸ் எஜெக்ஷஷன் காரணமாகப் பூமியைச் சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியுள்ளது. இதனால் பூமியில் ரேடியோ தகவல் தொடர்பு சிக்னல்கள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சூரிய வெடிப்பின் போது அதிகளவில் வெளியேறும் எக்ஸ்-கதிர்கள் மற்றும் புற ஊதாக் கதிர்கள் பூமியின் மேல் வளிமண்டலப் பகுதியை அடைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் உயர் அதிர்வெண் ரேடியோ அலைகளின் பரிமாற்றத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்பு அமைப்புகள் தற்காலிகப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தொடர்புத் தடங்கல்கள் சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
